ஆயர் குரோ, அக்டோபர் 12: கடந்த வாரம் மலாக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் 15 வயது மாணவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நான்கு மாணவர்கள் ஆறு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்நால்வரும் அடுத்த மாதம் எஸ்.பி.எம் தேர்வை எழுதவுள்ள மாணவர்களாவர்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அம்மாணவர்களுக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை, ஆயர் குரோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் துணைப் பதிவாளர் எஸ். ஆஎ. ஆராதனா வெளியிட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததால், இச்சம்பவம், குற்றவியல் சட்டம், செக்ஷன் 375B-யின் விசாரிக்கப்படுவதாக டத்தோ சுல்கைரி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி பிற்பகல் மணி 2.50 அளவில் அலோர் காஜாவில் உள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறையில் அம்மாணவியை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த நான்கு மாணவர்களில் இருவர், திறன்பேசி மூலம் அச்சம்பவத்தை காணொளியாகப் பதிவும் செய்துள்ளனர்.
அக்காணொளி, சம்பந்தப்பட்ட அம்மாணிவியின் தாயாருக்கு ஆசிரியர் ஒருவரால் பகிரப்பட்டதை அடுத்து, அவர் அவ்விவகாரம் தொடர்பில் போலீஸ் புகாரளித்துள்ளார்.
--பெர்னாமா