பாரிஸ், அக்டோபர் 12: பிரான்ஸ் பிரதமராக பதவியேற்று நான்கு நாட்களுக்குப் பிறகு இராஜினாமா செய்த செபாஸ்டியன் லெகார்னு (Sébastien Lecornu), மீண்டும் அரசாங்கத்தை வழிநடத்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) இனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் குறைப்பதற்காக, அரசியல் கட்சிகளின் செல்வாக்கிலிருந்து விடுபட்ட, மேலும் வெளிப்படையான அரசாங்கத்தை அமைப்பதாக லெகார்னு உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "அரசியல் முட்டுக்கட்டை மற்றும் அதிகரித்து வரும் நிதி அழுத்தங்களை எதிர்கொள்ளும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான புதிய நிர்வாகத்திற்கு நான் ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை. எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்" என்றார்.
விரைவில் அறிவிக்கப்பட உள்ள லெகார்னுவின் புதிய அரசாங்கம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் மேக்ரான் தலைமையின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் லெகார்னு மீண்டும் நியமனம்
12 அக்டோபர் 2025, 6:37 AM