கோலாலம்பூர் அக் 11 ;-எதிர்க்கட்சிகள் உட்பட முந்தைய அரசாங்கத் தலைவர்கள் அனைவரும் உதவி மானிய இலக்கைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஒப்பு கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், அரசியல் லாபத்துக்காக, அதை தவிர்த்தனர், அது தாமதமானது.
ஒரு நாட்டின் வளம் நாட்டு மக்களிடம் வழங்க வேண்டும், அதை வழிப்போக்கர்கள் எல்லாம் பயன்படுத்த விடுவது இந்த நாட்டு மக்களுக்கு செய்யும் பெரிய துரோகம்
எனவே, எங்கள் கருத்துப்படி, வருமானத்திற்கு ஏற்ப உதவி மானியம் வழங்குவது மலேசிய மக்களுக்கு மட்டுமே. இந்த நாட்டு மக்களுக்கான ஒரு சலுகை அது., வெளிநாட்டினருகோ அல்லது பெரிய நிறுவனங்களுக்கோ அல்ல.
அரசு மானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் அது முறையாக இலக்கிடப் பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும், இதனால் பொது நிதி மக்களைச் சென்றடையும்.
சில உதாரணங்கள் தருகிறேன். இந்தப் பொது மிதக்கும் மானிய உதவிக்கு முன்பு ஆண்டுக்குப் பல பில்லியன்கள் செலவாகி இருப்பதை நாங்கள் அறிவோம்.
ஆனால் நடப்பு முறையில் கோழியின் விலை கட்டுப்பாடு விநியோகச் சீர்திருத்தத்தின் வழி RM1 பில்லியனை வெற்றிகரமாகச் சேமித்துள்ளது மற்றும் கோழியின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் நாம் முட்டைகளுக்கும் RM1 பில்லியனை உதவி மானியமாக வழங்கினோம் .
இப்போதைய நடைமுறையில் மானிய உதவி நிறுத்தப்பட்டு உற்பத்தி விநியோகச் சீரமைப்பினால் 1 பில்லியன் சேமிக்க முடிகிறது.அதாவது ஏற்கனவே இரண்டு பில்லியனாக உள்ளது.
மானியங்களைத் தீர்மானித்தல் மற்றும் மின்சாரக் கட்டண-ங்களை மறுசீரமைத்தல் ஆகியவை சராசரியாக RM6 பில்லியனைச் சேமித்துள்ளன.
சில தரப்பு நாம் திட்டத்தை அமல் செய்யும் முன்பே , மக்கள் அழுத்தத்தில் இருப்பதைப் போல விளம்பரம் செய்தது,
ஆனால் சீரமைப்பு முறையினால் எண்பத்தைந்து சதவீதப் பயனர்கள் எந்தவொரு கட்டண உயர்வுக்கும் உட்பட்டு இருக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், மின்சார மானிய இலக்கிற்குப் பிறகு குறைந்த மின்சார பில்களின் நன்மையை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
அதே போன்ற டீசல் மானிய இலக்கு அரசாங்கத்திற்கு RM5 பில்லியன் நிதியை வெற்றிகரமாகச் சேமித்துள்ளது. பொதுப் போக்குவரத்து, மீன்பிடித்தல் மற்றும் சரக்குப் போக்குவரத்து துறைகளுக்கும் மானிய விலையில் உத்தரவாதம் அளிக்க முடியும்.
ரோன் மானிய இலக்கு-வெளிநாட்டவர்கள் அதற்கான சரியான பணம் செலுத்துகிறார்கள், ஆனால் மலேசியர்கள் மற்ற நாட்டுக்காரர்களைப் போன்று அல்லாமல் மலிவான கட்டண வசதிகளை அனுபவிக்க முடிகிறது.
எனவே, BUDI திட்டத்தின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அதன் சுமூகமான செயல்பாட்டிற்காக நன்றி, மேலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் BUDI மூலம் ரோன் 95 வாங்கப் பரிவர்த்தனை செய்துள்ளனர். இவைகளில் இருந்து அந்த உபரி மக்களுக்குத் திருப்பித் தரப்படுகிறது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்