ad

சிலாங்கூரில் மற்றும் ஐந்து மாநிலங்களில் 820 கிலோமீட்டர் பழைய குழாய்கள் மாற்றம்

11 அக்டோபர் 2025, 10:24 AM
சிலாங்கூரில் மற்றும் ஐந்து மாநிலங்களில்  820 கிலோமீட்டர் பழைய குழாய்கள் மாற்றம்
சிலாங்கூரில் மற்றும் ஐந்து மாநிலங்களில்  820 கிலோமீட்டர் பழைய குழாய்கள் மாற்றம்

உலு லங்காட், 11 அக்டோபர்: சிலாங்கூர் மாநில அரசு, மக்களுக்கு தரமான நீர் வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் உள்ள பழைய நீர்குழாய்களை மாற்றும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளது.

இந்த முயற்சியை மாநில அரசு 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கான மாநில நிர்வாக கவுன்சிலர் டத்தோ இஸ்ஹாம் ஹாஷிம் தெரிவித்தார் .

வருடத்துக்கு 300 கிலோமீட்டர் நீளமான குழாய்கள் மாற்றப்படும், இதற்கான மொத்த செலவு சுமார் RM450 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இரண்டு ஆண்டுகளில் 150 கிலோமீட்டர் குழாய்கள் மாற்றப்பட்டதாகவும், இது மாநில அரசின் நீண்டகால முயற்சியின் ஓர் அங்கமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் நீர் சேவை ஆணையத்திலிருந்து (SPAN) மானியம் பெற்று வருகிறது. இது ‘Non-Revenue Water (NRW)’ அல்லது இழந்த நீர் விகிதத்தை குறைப்பதில் மாநிலம் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ததற்கான அங்கீகாரம் என்று இன்று உலு லங்காட் தாமான் தாசிக் செம்பாகாவில் நடைபெற்ற ‘உலக ஆறுகள் தின’ (Hari Sungai Sedunia) நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதிகள் கிடைத்தவுடன் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என அவர் கூறினார். இந்த பழைய குழாய்கள் மாற்றும் திட்டம் சிலாங்கூரின் நீர் விநியோக அமைப்பு மற்ற மாநிலங்களை விட அதிக திறமையுடன் செயல்படுவதாக குறிப்பிட்டார். இது மாநில அரசின் மக்களுக்கான அடிப்படை சேவைகளின் தரத்தையும் திறனையும் மேம்படுத்தும் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.