மலாக்கா, அக் 11: அடுத்த மாதம் SPM தேர்வு எழுதவுள்ள நான்கு ஆண் மாணவர்கள், ஒரு பெண் மாணவியை பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படுவதையடுத்து ஆறு நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முதல் அக்டோபர் 16 வரை 17 வயதுடைய அந்த நால்வருக்கும் அயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரிமாண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மலாக்கா மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ துல்கைரி முக்தார் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி மதியம் சுமார் 2.50 மணியளவில் அலோர் காஜா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் இந்த பலாத்காரச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இரண்டு சந்தேக நபர்கள் கைப்பேசி மூலம் அந்தச் சம்பவத்தை பதிவு செய்திருந்தனர்.