ஷா ஆலம், அக் 10: அரசு, பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) கல்வி பயிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 5,800 மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டத்தை நடைமுறைப் படுத்த உள்ளது. இந்த முயற்சிக்கு வருடத்திற்கு RM 120 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதன் நோக்கம் குறைந்த வருமானம் பெரும் B40 கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள் உயர் கல்வியை சமமாக பெறுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தும் என்று பிரதமர் கூறினார்.
இதற்கிடையில், அரசு பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) முதல் தர கௌரவ இளங்கலைப் பட்டம் பெற்ற, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்ப மாணவர்களுக்கு தேசிய உயர் கல்வி நிதி அமைப்பு கடன் திருப்பிச் செலுத்தும் பொறுப்பிலிருந்து விலக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முயற்சியால் சுமார் 6,000 கடனாளிகள் பயன்பெறுவர் என்றும், இதற்காக வருடத்திற்கு RM 90 மில்லியன் ஒதுக்கப்படும் என இன்று 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கலில் அவர் இதனைத் தெரிவித்தார்.