சிகரெட் மற்றும் மது வரி உயர்வு
கோலாலம்பூர், அக் 10 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் கீழ், சிகரெட் மற்றும் மது பொருட்களுக்கு விதிக்கப் பட்டுள்ள எக்சைஸ் வரி விகிதம் 2025 நவம்பர் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.
ஒரு சிகரெட்க்கு இரண்டு சென் ஆக அதிகரிப்பு செய்த நிலையில், சிகார், சுருட்டு மற்றும் சிகரில்லோஸ் வகை பொருட்களுக்கு ஒரு கிலோக்கு RM40, அதேபோல் ‘ஹீட்டெட் தோபாக்கோ’ பொருட்களுக்கு ஒரு கிலோக்கு RM20 வரி உயர்வு அமலாகும்.
நிக்கோட்டின் மாற்று சிகிச்சை பொருட்களுக்கு விதிக்கப் பட்டிருந்த இறக்குமதி வரி மற்றும் விற்பனை வரி விலக்கு 2027 டிசம்பர் 31 வரை நீட்டிக்க படுவதுடன், அது ‘நிக்கோட்டின் மிஸ்ட்’ மற்றும் ‘நிக்கோட்டின் லோசென்ஜஸ்’ பொருட்களுக்கும் விரிவு படுத்தப்படுகிறது.
மேலும் மது பானங்களின் அணுகலைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில், மது பானங்களுக்கான எக்சைஸ் வரி விகிதம் 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் மது பொருட்களிலிருந்து கிடைக்கும் கூடுதல் வருவாய், சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படும்.
அந்த நிதி நுரையீரல் ஆரோக்கிய முயற்சி, நீரிழிவு மற்றும் இதய நோய் சிகிச்சை உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.