சுகாதார அமைச்சுக்கு RM 46.5 பில்லியன் ஒதுக்கீடு; 4,500 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தர பதவி அமர்வு
ஷா ஆலாம், அக் 10: 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மலேசிய சுகாதார அமைச்சகத்திற்கு மொத்தம் RM 46.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.இது, இவ்வாண்டின் RM 45.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்.
இந்த ஒதுக்கீடு சுகாதாரத் துறையின் ஆறு முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தி, நாட்டின் சுகாதார அமைப்பு மேலும் வலுவாகவும் போட்டியிட கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.சுகாதாரத் துறைக்கான முக்கிய ஒதுக்கீடுகள் பின்வருமாறு:-
நோயாளிகளை ராணுவம், பல்கலைக்கழகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வெளியூழியம் செய்வதற்கான ஒத்துழைப்பு – RM 140 மில்லியன்.
நாட்டின் அனைத்து மாவட்ட மருத்துவமனை வார்டுகள் மேம்படுத்தப்படும் – RM 100 மில்லியன்.
மொத்தம் 4,500 ஒப்பந்த வைத்தியர்கள் அடுத்த ஆண்டு நிரந்தர பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.
சுகாதார அமைச்சு பயிற்சி நிறுவனத்தின் (Institut Latihan KKM) பட்டதாரிகள் 935 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும்.