ஷா ஆலாம், அக்.10: 2026 ஆண்டிலிருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு மையங்கள் அல்லது இடைக்கால பராமரிப்பு மையங்களில் செலவிடப்படும் தொகைக்கு தனிநபர் வருமான வரி கழிவு வரம்பு RM3,000 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்பு இந்த வசதி ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான தாமான் அசுஹன் அல்லது தாமான் டிட்டிக்கான் கனாக்-கனாக் (Taman didikan kanak-kanak) மையங்களின் கட்டண செலவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது அந்த தளர்ச்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.
குழந்தையை வளர்க்கும் தாயின் சிறிய கைகள் முதல் கண்ணாடி மேல்தளத்தை உடைக்கும் பெண்கள் வரை, பெண்கள் அதிகாரமடைவது ஒரு இரக்கம் அல்ல, அது நிறைவேற்றப்பட வேண்டிய நீதி,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது தெரிவித்தார்.