கோலாலம்பூர் அக் 10: 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறளை மேற்கொள்காட்டி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் பேசினார்.
மேலும், திருக்குறளின் பொருள் குறித்து அதன் விளக்கத்தையும் அன்வார் வழங்கினார். இதனால் பிரதமருக்கு கரவொலிகள் எழுப்பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகமூட்டினர்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115),

நடுவுநிலைமை என்ற அதிகாரத்தின் கீழ் இந்த திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இதன் பொருளானது, தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கலின் போது பிரதமர் ஒரு திருக்குறளை மேற்கொள்காட்டி பேசுவது வழக்கமாக கொண்டிருக்கிறார். அவ்வகையில் இம்முறையும் பிரதமர் திருக்குறளை மேற்கொள்காட்டி பேசியுள்ளார்