ஷா ஆலாம், அக் 10: உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், உள்ளூர் சுற்றுலா மையங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக் கட்டணச் செலவுகளில் RM1,000 வரை தனிநபர் வருமான வரியில் சிறப்பு தளர்வு வழங்கப்படும்.
மலேசியா சுற்றுலா ஆண்டு 2026-ஐ முன்னிட்டு மக்களை நாட்டுக்குள் சுற்றுலா செல்ல ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதனை தெரிவித்தார்.