கோலாலம்பூர், அக்10- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் தலைமையிலான மடாணி அரசாங்கத்தின் நான்காவது பட்ஜெட்டைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தற்போது தாக்கல் செய்து வருகிறார். மலாய் பாரம்பரிய ஆடையில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் வருகையளித்து தனது பட்ஜெட் உரையை மாலை 4 மணிக்குத் தொடங்கினார்.
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கருப்பொருளாக BELANJAWAN RAKYAT எனப்படும் மக்களுக்கான பட்ஜெட் என்று பிரதமரும் நிதியமைச்சருமான நிதியமைச்சருமான அவர் கூறினார்.
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மொத்தமாக 419.2 பில்லியன் ரிங்கிட்டாகும் என்று அவர் கூறினார்.