கோலாலம்பூர், அக் 10 – ஆசியான் நாடுகளுக்கிடையிலான எல்லைக்கடந்த முதலீட்டை வலுப்படுத்தும் நோக்கில், வழங்கல் சங்கிலித் தொடர்புகளை விரிவுபடுத்துவதும், தொடர்ச்சியான தொழில்நுட்ப புதுமைகளை ஊக்குவிப்பதும் சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய நோக்கமாகும் என இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ' ஹாசன் அஸ்ஹாரி இட்ரிஸ் தெரிவித்தார்.
இம்மாநாட்டின் வாயிலாக, ஆசியான் வட்டாரத்தின் வளர்ச்சி பாதையை தீர்மானிக்கக்கூடிய கொள்கைத் தளங்கள் மற்றும் நிலவரங்களை ஆழமாக ஆராயும் பொருட்டு சிலாங்கூர் ஆசியான் வணிக உச்சிமாநாடு 2025 (SABC 2025) அமைக்கப்பட்டுள்ளது. மாறி வரும் உலகளாவிய பொருளாதார சூழலுக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் பிராந்திய ஒத்துழைப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் தேவைப்படுத்துகின்றன.
“SABC 2025 மாநாடு, ஆசியான் பிராந்தியத்தின் எதிர்கால வளர்ச்சித் பாதை வகுக்கும் முக்கியக் கூறுகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்களைத் திறக்கின்றது. அரசுத் தலைவர்கள், தொழில்துறை முன்னோடிகள் மற்றும் கல்வி வல்லுநர்கள் ஆகியோர் ஒரே மேடையில் இணைந்து, புதுமை மற்றும் ஊக்குவிக்கத்தக்க கொள்கை அம்சங்களை முன்வைக்கின்றனர்,” என டத்தோ’ ஹாசன் கூறினார்.
இவ்வுரையை அவர் இன்று, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் சிலாங்கூர் பன்னாட்டு வணிக உச்சிமாநாடு 2025 (SIBS) இன் ஒருபாகமாக நடத்தப்பட்ட SABC மாநாட்டின் தொடக்க அமர்வில் வழங்கினார். இது மாநில மற்றும் தேசிய அளவிலான முதலீட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது.
மாநாட்டின் முக்கிய உரையாடல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு புவியியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களின் சூழ்நிலையை பரிசீலிக்கின்றன. மேலும், வருங்காலத்திற்கான வளர்ச்சியை நிலைத்த மற்றும் உள்ளடக்கிய முறையில் கட்டமைக்க, புதிய தலைமுறை தொழில்முனைவோர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் பங்காற்றல் தேவைப்படுவதையும் மாநாடு வலியுறுத்துகிறது.
இதேவேளை, மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25% பங்களிப்பை சிலாங்கூர் மாநிலம் வழங்கி வருகின்றது. இத்தகைய பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், கிள்ளான் துறைமுகம் மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் (KLIA) ஆகியவை, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயில்களாகப் பங்களிக்கின்றன.
மாநிலத்தின் வலிமையான பொருளாதார சூழ்நிலை, முன்னோடியான கொள்கைகள், திறமையான மனிதவளங்கள், மற்றும் தொழில்துறைத் தேவைகளைத் துல்லியமாக புரிந்து கொள்ளும் மேலாண்மை அணுகுமுறைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலம் உருவாகியுள்ளது. இதன் மூலம் சிலாங்கூர் தொழில்துறை மற்றும் முதலீட்டு தளமாக ஆசியான் வட்டாரத்தில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது.