கோலாலம்பூர், அக். 10 - பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் இன்று காலை 9.44 மணிக்கு ரிக்டர் அளவில் 7.4 எனப்பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 7.3 டிகிரி வடக்கு மற்றும் 127.0 டிகிரி கிழக்கில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது,
பிலிப்பைன்ஸின் பிஸ்லிக்கிலிருந்து தென்கிழக்கே சுமார் 122 கிலோமீட்டர் தொலைவில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அது குறிப்பிட்டது.