லண்டன், அக் 9 – கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் முதல் கால்பந்து வீரர் பில்லியனராக உருவெடுத்துள்ளார் என்று புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
புளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, 40 வயதான இந்த வீரரின் மொத்த சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் 1.39 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு அவரது விளையாட்டு வாழ்க்கை வருமானம், முதலீடுகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது.
2022-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் அல்-நஸ்ரில் இணைந்த ரொனால்டோ, ஆண்டுக்கு சுமார் 237 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியத்துடன் ஒப்பந்தம் செய்தார். தற்போது 2027 வரை அந்தக் கழகத்துடன் தொடரும் புதிய ஒப்பந்தத்தையும் அவர் கையொப்பமிட்டுள்ளார்.
அத்துடன், நைக் நிறுவனத்துடன் ஆண்டுக்கு 17.9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தமும் அவருக்குள்ளது.