ஜொகூர் பாரு அக்டோபர் 7, ஜொகூர் பாருவில் சிங்கப்பூர் வாகனங்கள் ரோன் 95 நிரப்பிய 10 சம்பவங்களை கேபிடிஎன் கண்டறிந்துள்ளது - ஜொகூரில் உள்ள உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (கேபிடிஎன்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ரோன் 95 பெட்ரோல் நிரப்பப்பட்ட 10 வழக்குகளைக் கண்டறிந்துள்ளது என்று அதன் மாநில இயக்குனர் லிலிஸ் சச்லிண்டா போர்னோமோ தெரிவித்துள்ளார்.
ஜொகூர் பாருவில் ஏழு வழக்குகளும், கோத்தா திங்கி, செகாமட் மற்றும் பொந்தியான் ஆகிய இடங்களில் தலா ஒரு சம்பவமும் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்."கடந்த வாரத்தில், பூடி மடாணி 95 (பூடி 95) முன்முயற்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் சிங்கப்பூர் வாகனங்கள் ரோன் 95 பெட்ரோல் நிரப்பிய மூன்று வழக்குகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது" என்றார்.
அனைத்து வழக்குகளும் அமைச்சகத்தின் கீழ் உள்ளன மற்றும் ஒவ்வொரு புகார் அல்லது சம்பவத்திற்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன."விசாரணை ஆவணங்கள் முடிந்ததும், அவை அடுத்த நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் அனுப்பப்படும்" என்று அவர் இன்று இங்குள்ள எகோன்சேவ் தாமான் தெரத்தை சூப்பர் மார்க்கெட்டில் ஜொகூர் மாநில அளவிலான மானிய விலையில் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு நிகழ்வை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சகம் பல அமர்வுகளை நடத்திய போதிலும், ஜொகூரில் உள்ள பெட்ரோல் நிலைய ஆப்ரேட்டர்கள் அதிக பொறுப்புடன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் லிலிஸ் சஸ்லிண்டா நினைவுபடுத்தினார்.
சிங்கப்பூருடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால், ஜொகூரில் உள்ள பெட்ரோல் நிலைய ஆபரேட்டர்கள் சிங்கப்பூர் வாகனங்கள் மலேசியர்களுக்கான மானிய விலையில் பெட்ரோலை தவறாக பயன்படுத்துவதற்கான அதிக ஆபத்தை எதிர் கொள்கிறார்கள் என்பதை கேபிடிஎன் புரிந்து கொள்கிறது என்று அவர் கூறினார்.
இதன் காரணமாக, இங்குள்ள பெட்ரோல் நிலைய ஆப்ரேட்டர்கள் அதிக அளவிலான விழிப்புணர்வை பராமரிக்க வேண்டும் மற்றும் பிரச்சனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்."நாங்கள் விசாரிக்கும்போது, சில ஆப்ரேட்டர்கள் இந்த சம்பவத்தை அவர்கள் கவனிக்கவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் ஒரு அமலாக்க நிறுவனமாக இதுபோன்ற வழக்குகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து, லில்லிஸ் சச்லிண்டா கூறுகையில், மானிய விலையில் பெட்ரோல் தவறாகப் பயன்படுத்துவதைச் சமாளிக்க தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் கேபிடிஎன் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தும் என்றார்.
சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாட்டு வாகன ஓட்டிகள் ரோன் 95 வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நினைவூட்டுவதற்காக ஜோகூர் எல்லை நுழைவு புள்ளிகளில் எச்சரிக்கைகள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்."சில நேரங்களில், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் ரோன் 95 அனுமதிக்கப்படவில்லை என்று தெரிந்தும் அதை நிரப்ப முயற்சிக்கின்றனர்.
"இதனால்தான் பெட்ரோல் நிலைய ஆபரேட்டர்களிடையே ஒரு அர்ப்பணிப்புள்ள குழுவைக் கொண்டிருப்பது மற்றும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதுபோன்ற நடைமுறை- களைத் தடுப்பதில் முக்கியமானது" என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டும் மலேசியர்களும் ரோன் 95 வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் லிலிஸ் சஸ்லிண்டா வலியுறுத்தினார்.
"அவர்கள் மலேசியர்களாக இருந்தாலும், அவர்கள் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டும் போது ரோன் 95 ஐ வாங்க முடியாது" என்று அவர் கூறினார்.