கோல பிலா, அக். 8 - கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய மன்றத்தின் (மாயின்ஸ்) ஜெம்போல் மாவட்ட
உதவி அதிகாரி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று இங்குள்ள ஜாலான் சாவா லெபார்-சுங்காக்கில் நேற்று நிகழ்ந்தது.
இரவு சுமார் 11.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் முகமது நவாவி ஹுசின் (வயது 38) என்ற அந்த அதிகாரி உயிரிழந்ததாக கோல பிலா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது முஸ்தாபா ஹுசின் கூறினார்.
இந்த விபத்து நிகழ்ந்தபோது அந்த அதிகாரி ஜெம்போலில் இருந்து சிரம்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். சம்பவ இடத்தை அடைந்த போது சாலையில் விழுந்து கிடந்த மரத்தின் மீது அவர் பயணம் செய்த பெரோடுவா விவா மீது மோதியது. இச்சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் வானிலை நன்றாக இருந்தது என அவர் சொன்னார்.
இந்த விபத்தின் விளைவாக உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்களுக்குள்ளான அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கார் மரத்தில் மோதியது - நெகிரி செம்பிலான் சமய மன்ற அதிகாரி மரணம்
8 அக்டோபர் 2025, 4:12 AM