ad

பூடி95- அடையாளக்கார்டை சோதனையிடும் அதிகாரம் உள்நாட்டு வர்த்தக அமைச்சுக்கு உள்ளது

8 அக்டோபர் 2025, 2:36 AM
பூடி95- அடையாளக்கார்டை சோதனையிடும் அதிகாரம் உள்நாட்டு வர்த்தக அமைச்சுக்கு உள்ளது

கோலாலம்பூர், அக். 8- மானிய விலை பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு முறை (எஸ்.கே.பி.எஸ்.) மற்றும் பூடி மடாணி ரோன்95 (BUDI95) இலக்கு மானியத் திட்டம் ஆகியவை  சீராக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக சட்ட விதிகளின் கீழ் பயனீட்டாளர்களின் அடையாளக்கார்டுகளை சரிபார்க்கும் அதிகாரம்  உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுக்கு உள்ளது.

அடையாளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது  தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ள வேளையில்   நியாயமான கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக  தேவைப்படும் போது மட்டுமே சோதனை மேற்கொள்ளப்படும்
என்றும் அமைச்சின் கோலாலம்பூர்  இயக்குநர் முகமட் சப்ரி செமான் கூறினார்.

பூடி95 முழுமையாக அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற பெட்ரோல் நிலையங்களிலும் விரிவான கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

கசிவு இடர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல்
அமலாக்க ஒருங்கிணைப்பு மூலம் அமலாக்க பணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக  கோலாலம்பூரில் 101 அமலாக்கப் பணியாளர்கள் ஆய்வுகளை நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் 196 பெட்ரோல் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை எந்தப் பிரச்சினைகளும் அல்லது சிக்கல்களும் கண்டறியப்படவில்லை. இன்றுவரை, கோலாலம்பூர் முழுவதும் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் மானிய விலை விற்பனை முறையை  செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சு  எந்த புகாரையும் பெறவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.