ad

மின் சிகரெட் வரியை RM4ஆக உயர்த்த மலேசியா சுகாதார அமைச்சகம் பரிந்துரை

7 அக்டோபர் 2025, 8:41 AM
மின் சிகரெட் வரியை RM4ஆக உயர்த்த மலேசியா சுகாதார அமைச்சகம் பரிந்துரை

ஷா ஆலம், அக் 7: மின் சிகரெட் அல்லது வேப் (vape) விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் முன், வேப் திரவ நிகோட்டினுக்கு விதிக்கப்படும் வரியை 40 சென்னிலிருந்து ஒரு மில்லி லிட்டருக்கு RM4ஆக உயர்த்த மலேசியா சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் (Belanjawan 2026) சேர்க்கப்படும் வகையில் நிதி அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி இன்று தெரிவித்தார்.

அவர் விளக்குகையில், “ஒரு சிகரெட் = 10 முறை புகைத்தல் (puff), ஒரு பாக்கெட் சிகரெட் = 200 puff, ஆனால் வேப் திரவம் 1 மில்லிலிட்டர் = 100 puff ஆகும்.

எனவே, இந்த அளவை அடிப்படையாகக் கொண்டு, வேப் திரவம் மீதான வரி 40 சென்னிலிருந்து RM4 வரை உயர்த்தப்படும் என்பது சுகாதார அமைச்சின் பரிந்துரை” என்றார்.

டத்தோ வான் சைபுல் வான் ஜான் (PN-தாசெக் கெலுகோர்) எழுப்பிய வேப் தடை அமலுக்கு முன் ஒரு தற்காலிக நடவடிக்கையாக இந்த வரி உயர்வு முன்மொழியப்பட்டதா என்ற கூடுதல் கேள்விக்கு லுகானிஸ்மா இவ்வாறு பதிலளித்தார்.

வேப் விற்பனையை முழுமையாக தடை செய்யும் நோக்கில், மத்திய அமைச்சரவைக்கு (Cabinet) இந்த ஆண்டு ஒரு நினைவூட்டல் ஆவணத்தை (memorandum) சுகாதார அமைச்சகம் சமர்ப்பிக்கவுள்ளது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், வேப் பயன்படுத்துவதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு — Evali (E-Cigarette or Vaping Product Use-Associated Lung Injury) நோய்களுக்காக, 2024ஆம் ஆண்டில் அரசு RM223 மில்லியன் செலவிட்டுள்ளது. இதற்கு மாறாக, வேப் வரியிலிருந்து அந்த ஆண்டில் கிடைத்த வருவாய் RM111 மில்லியன் மட்டுமே என்பதால், இந்த செலவுகள் வரி வருவாயை விட மிகவும் அதிகமானது என்பது தெளிவாகிறது.

“தடை நடவடிக்கைகள் படிப்படியாக (berperingkat) நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதில் அமலாக்கம் (enforcement), கல்வி (education) மற்றும் சமூக ஆதரவு (community support) முக்கியக் கூறுகளாக அமையும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.