கோலாலம்பூர், அக் 6: 2027 SEA விளையாட்டின் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் மாஸ்கோட் உருவாக்கப் போட்டியில் பொதுமக்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி அனைத்து மலேசிய குடிமக்களுக்கும் திறந்திருக்கும் என்று மலேசிய SEA விளையாட்டு ஏற்பாட்டுக் குழு (MASOC) செயலகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
இந்த போட்டி எதிர்வரும் டிசம்பர் 31 வரை திறந்திருக்கும். மேலும் https://forms.gle/ZUgb3k3BKUZxaXvi8 என்ற அதிகாரப்பூர்வ இணைப்பு மூலம் பொதுமக்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இப்போட்டியில் வெற்றியாளருக்கு சான்றிதழுடன் RM8,000 வழங்கப்படும், அதே நேரத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் சான்றிதழுடன் RM5,000 மற்றும் RM3,000 ஐப் பெறுவார்கள்.
“இந்தப் போட்டி மலேசியர்களுக்கு 2027 SEA விளையாட்டுகளின் வரலாற்றில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பாகும்” என்று MASOC தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் ரஷீட் யாகூப் அறிக்கையில் தெரிவித்தார்.
- பெர்னாமா