கோலாலம்பூர், அக் 10: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள வறிய இந்திய சமூகத்தினருக்கு அமானா இக்தியார் மலேசியா (AIM) 16,600 உணவு கூடைகளை நன்கொடையாக வழங்கியது.
சுமார் 20 லட்சம் ரிங்கிட் செலவில் அந்த உணவுக் கூடைகள் தயாரிக்கப்பட்டதாகவும், அவை நாடு முழுவதும் விநியோகிக்கப்படவிருப்பதாகவும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் தமது பங்களிப்பை வழங்கியதாக டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
அரிசி, சமையல் எண்ணெய், முறுக்கு, அதிரச மாவு, பருப்பு, நல்லெண்ணெய் உள்ளிட்ட தீபாவளிக்கு பயன்படும் இன்னும் பல பொருள்கள் அக்கூடையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரையில் உள்ள B40 பிரிவைச் சேர்ந்த அனைத்து இந்திய குடும்பங்களுக்கும் வழங்கவுள்ளோம் என்றார் அவர்.