சிபு, அக். 6 - இங்கு ஜாலான் ஓயாவில் உள்ள ஒரு பள்ளி அருகே இன்று கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை மோதியதற்காக ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இருபது வயதுடைய அந்த நபர் ஆம்பெடமைன் போதைப்பொருளைப் பயன்படுத்தியியிருப்பது ஆரம்பகட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி கூறினார்.
செயின்ட் எலிசபெத் தேசிய இடைநிலைப் பள்ளி அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அதன் ஓட்டுநர் கீழே விழுந்தார். பிறகு தப்பியோடும் முயற்சியில் கார் ஓட்டுநர் மேலும் அங்குள்ள பல வாகனங்களிலும் மோதினார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டியதற்காக
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)வது பிரிவின் கீழும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 15(1)(ஏ) பிரிவின் கீழும் விசாரணை நடத்தப்படுவதாகவும் சுல்கிப்லி கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான 1 நிமிடம் 29 வினாடிகள் கொண்ட காணொளி மூலம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
பொறுப்பற்ற முறையில் காரைச் செலுத்தி வாகனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது
6 அக்டோபர் 2025, 2:12 AM