ஷா ஆலம், அக் 6: தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இலவச மொத்த கழிவு சேகரிப்பு சேவையை சுபாங் ஜெயா மாநகராட்சி வழங்குகிறது.
இன்று முதல் அக்டோபர் 15 வரை அந்நகரப் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் இச்சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என முகநூல் மூலம் எம்பிஎஸ்ஜே தெரிவித்துள்ளது.
"தரை வீடுகள் கொண்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது என பிபிடி தெரிவித்துள்ளது.

இச்சேவையில் மின் பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் போன்றவை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட மொத்த கழிவுகளின் வகைகளில் மெத்தைகள் மற்றும் பழைய தளவாடப் பொருட்கள் அடங்கும்.
இச்சேவைக்கு 03-8081 4437 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது 011-3538 4437 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ KDEB கழிவு மேலாண்மை தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்யலாம்.