ad

சட்டமன்ற உறுப்பினர் சௌஜானா பூச்சோங்,  ஸ்ரீ முருகன் வழிபாடு  சேவை  மையத்திற்கு  உதவி

5 அக்டோபர் 2025, 2:47 PM
சட்டமன்ற உறுப்பினர்  சௌஜானா பூச்சோங்,  ஸ்ரீ முருகன் வழிபாடு  சேவை  மையத்திற்கு  உதவி

ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் அஸ்மி சௌஜானா பூச்சோங்,  ஸ்ரீ முருகன் வழிபாடு  சேவை  மையத்திற்கு  உதவி அளிக்க வாக்குறுதி.

பூச்சோங்  அக் 5,  சௌஜானா பூச்சோங்,  ஸ்ரீ முருகன் வழிபாடு  சேவை  மையத்தின்  ஆண்டு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  மணி 10 க்கு தொடங்கியது. அதில் கலந்து கொண்ட  உறுப்பினர்கள் காலைச் சிற்றுண்டிக்குப் பின் முறையாகக் கூட்டம் தொடங்கி இனிதே நடந்தது.

இன்றைய  நிகழ்ச்சிக்குச் சிறப்பு  விருந்தினராகக் கலந்து கொண்ட  ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற  உறுப்பினர் அபாஸ்  அஸ்மிக்கு  சிறப்பு செய்யப்பட்டது. அதன் பின்  நிர்வாக உரையின் வழி  முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு, அவைகளை முறையான சம்பந்தப்பட்ட இலாகாவிடம் எடுத்துச் செல்ல உறுதி  அளித்தார். 

2b326b1f-01cf-4ee6-abfa-362ef954daa1 (1).jpeg

இந்தச் சேவை மையம் மாதம் ஆயிரம் வெள்ளி  வாடகை செலுத்தி இந்த  இட வசதியைப் பெற்றுச் சேவை செய்வதை  அறிந்து  அடுத்த ஆண்டிற்கான வாடகையில் 6 மாத வாடகை வழங்க ஒப்பு கொண்டார். அத்துடன்  முதியவர்கள் , உடல் குறை உடையவர்கள் மற்றும் ஏழைகளுக்குத் தீபாவளி  அன்பளிப்பு வழங்க ஒப்பு கொண்டார்..

 உதவி தேவை படுபவர்களின் விவரங்களைத்  தனது செயலாளருக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டார். மேலும்  அங்கு நடக்கும் சிறுவர்கள் மேம்பாட்டு மற்றும் சமய நிகழ்வுகளுக்குத்  தனது ஆதரவை வெளிப்படுத்தினர்.

நமது பிள்ளைகளை நல்ல குடிமக்களாக   இறை பக்தி உடையவர்களாக  மேம்படுத்தும் சௌஜானா பூச்சோங் வழிபாடு சேவை மையம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், பெண்கள்  மேம்பாட்டு செயல்களுக்கும் தனது முழு ஆதரவைத்  தெரிவித்தார்.

உறுப்பினர்கள்  அனைவருக்கும்  முன் கூட்டியே இனிய தீபாவளி வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொண்டு நண்பகலில் விடைபெற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.