ஈப்போ, அக். 4- ரக்பி போட்டியில் பங்கேற்ற ஒரு மாணவரின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து 2025 தேசிய உறைவிடப் பள்ளி ரக்பி எழுவர் வெற்றியாளர் கிண்ண ரக்பி போட்டியை ரத்து செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்ட கல்வி அமைச்சு, மாணவரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் போட்டியை நாளை வரை ரத்து செய்து மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது.
போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த அம்மாணவர் சம்பவ இடத்தில் பணியில் இருந்த மருத்துவக் குழுவினரால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் இறந்துவிட்டது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
ரக்பி விளையாட்டின்போது மாணவர் திடீர் மரணம்.
4 அக்டோபர் 2025, 11:35 AM