ad

முதுமை தேசம் சவால்களை எதிர்கொள்ள முதியோர் பராமரிப்பு கொள்கையை சிலாங்கூர் வலுப்படுத்தும்

4 அக்டோபர் 2025, 9:39 AM
முதுமை தேசம் சவால்களை எதிர்கொள்ள முதியோர் பராமரிப்பு கொள்கையை சிலாங்கூர் வலுப்படுத்தும்
முதுமை தேசம் சவால்களை எதிர்கொள்ள முதியோர் பராமரிப்பு கொள்கையை சிலாங்கூர் வலுப்படுத்தும்

ஷா ஆலம், அக். 4- மூத்த குடிமக்கள் குறிப்பாக தனியாக வசிப்போர் மற்றும் உயர் தாக்கம் கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சமூக சூழியலை வலுப்படுத்த மாநில அரசு கடப்பாடு  கொண்டுள்ளது.

மூத்த குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் உள்ள பொறுப்புகளை அரசாங்கம், குடும்பம் மற்றும் சமூகம் பகிர்ந்து கொள்ளும் கோட்பாட்டை வலியுறுத்தும் சிலாங்கூர் பராமரிப்பு பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்று சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.

அடிக்கடி வருகை மேற்கொள்வது, தொலைபேசி வழி அழைப்பது போன்ற எளிய செயல்முறைகள் மூலம் ஆபத்துகளை தவிர்க்க இயலும். இது சிறிய விஷயமாக தோன்றினாலும் தனிமை மற்றும் தங்களை உணராமல் காணாமல் போவது போன்ற பிரச்சினைகளைக் களைய முடியும் என அவர் சொன்னார்.

மூத்த குடிமக்கள் நடவடிக்கை மையம் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் உதவிகளை வழங்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் அத்தரப்பினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான சாத்தியங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அதோடு உடல் நலம் மற்றும் மனக்கவலைகளை தானாக கண்டறிய ஸ்மார்ட் கண்காணிப்பு அமைப்புகளை பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என அவர் சிலாங்கூர் மீடியாவிடம் தெரிவித்தார்.

தேவைப்படுவோருக்கு உதவிகள் விரைந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகத்துடன் ஒத்துழைப்பு நல்கப்படுகிறது என்றும் அன்ஃபால் குறிப்பிட்டார்.


அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.