சிலாங்கூரில் சமீபக் காலமாக பல இடங்களில் தெரு நாய்கள் குறித்த பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் செராஸில் சிறுவன் ஒருவனை தெரு நாய் கடித்த காணொளி சமுக வலைத்தளத்தில் வைரலானது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, தெருநாய்கடியிலிருந்து தற்காத்து கொள்ளவும் அல்லது பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதனை குறித்து கால்நடை மருத்துவர் டினேஸ் அவர்களை மீடியா சிலாங்கூர் பேட்டி கண்டது.
தெருநாய்கள் ஏன் பொதுமக்களை கடிக்கின்றன?
- தன்னை தற்கொத்து கொள்ள
- இதற்கு முன் எதிர்கொண்ட அனுபவம்
- பயம்
- உணவை பாதுகாத்து கொள்ள
- குட்டிகளை பாதுகாக்க
தெருநாய்கள் கடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?
- தெருநாய்களை தொந்தரவு செய்யாதீர்கள்
- தெருநாய்கள் கோபமாக இருக்கும் சமயத்தில் அவற்றின் அருகில் செல்லாதீர்கள்
- தெருநாய்கள் தேவை இல்லாமல் கோபப்படுத்தாதீர்கள்
- அவைகளின் அருகில் செல்லும் முன்
- தெருநாய்களுக்கு உதவ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடவும், தனிச்சையாக செயல்பட வேண்டாம்
- ஓடக் கூடாது
- கத்தக் கூடாது
- தெருநாய்கள் தாக்கக்கூடும் என்று தெரிந்தால் உடலில் அதிக பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடலை உள்ளிழந்தவாறு சுருட்டி கொள்ள வேண்டும்
தெருநாய்கள் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
- சிறு காயங்களாக இருந்தால் முதலில் நீரில் கழுவவும்
- பின், அருகில் உள்ள கிளினிக்கு சென்று, தொற்றுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேல் சிகிச்சையை பெறவும்
- அதிக இரத்த போக்கை ஏற்படுத்தும் கடுமையான காயங்களாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும்