ஷா ஆலம், அக் 3 - சிலாங்கூர் மாநில அரசு, பிரதமர் துறையின் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU) உடனான ஒத்துழைப்பில், e-Kasih திட்டம் 2025 தொடர்பான திறந்த பதிவு கவுண்டரை நடத்த உள்ளது.
இந்த நிகழ்வு அக்டோபர் 7, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று, மாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை, ஷா ஆலமிலுள்ள SSAAS கட்டடத்தில் நடைபெற உள்ளது.
e-Kasih திட்டம் என்பது தேசியளவில் ஏழ்மை தொடர்பான தரவுத்தொகுப்பாகும். இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரச உதவிகள், வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாட்டு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை துல்லியமாக செய்லபடுத்தப்படுவதை உறுதிசெய்யும்.
இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம். அரசு உதவிகள் மற்றும் திட்டங்கள் மூலம் பயன்பெற உடனே பதிவு செய்ய வாருங்கள் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.