சிரம்பான், அக். 3 - செனாவாங்கில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்குக் கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் நேற்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் 10 வயது சிறுவனின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை பேரிடம் 27 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவத்திற்கு முந்தைய செயல்களுக்கான காரணத்தை அடையாளம் காண்பது முதல் பள்ளி கழிப்பறையில் அம்மாணவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டது விசாரணை வரை அனைத்து கோணங்களிலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
துன்புறுத்தல் தொடர்பாக தண்டனைச் சட்டத்தின் 507சி பிரிவின் கீழ் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.
இதற்கிடையில், விசாரணையை வெளிப்படையாக நடத்துவதற்கு காவல்துறைக்கு இடம் அளிக்கும் அதேவேளையில் விசாரணை செயல்முறையை சீர்குலைக்கும் எந்த ஆதாரமற்ற ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று அல்சாஃப்னி பொதுமக்களை வலியுறுத்தினார்.
விசாரணையில் சிறார் சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் 2001ஆம் சிறார் சட்டத்தின் கீழ் சிறார்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பும் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவரின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம் - சவப்பரிசோதனையில் அம்பலம்
3 அக்டோபர் 2025, 5:23 AM