கோலாலம்பூர், அக் 3 - ஈ.ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான கூடுதல் ரோன் 95 பெட்ரோல் உதவித்தொகை பெறும் வரம்பை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
எதிர்வரும் பத்தாம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம்.
மேலும், BUDI MADANI RON95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித்தொகை குறித்து கலந்துரையாடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற Junior Innovathon எனும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்னர், டத்தோ நோர் அஸ்மி டிரோன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி முழுநேர e-hailing ஓட்டுநர்களுக்கு கூடுதல் வரம்புகளை வழங்க நிதி அமைச்சு புதன்கிழமை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா