கோலாலம்பூர், அக் 2 - இன்று மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது.
இந்த அரச திருமண ஊர்வலத்தை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். காலை சுல்தான் அப்துல் அஜிஸ் அரச கேலரியில் தொடங்கிய இந்த ஊர்வலத்தைக் காண பொதுமக்கள் வண்ண உடைகளுடன் திரளாகக் கூடியிருந்தனர்.
காலை சரியாக 10.05 மணிக்கு இஸ்தானா ஆலம் ஷாவில் மரியாதை நிமித்தம் 11 பீரங்கி குண்டு முழகத்துடன் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் அவரின் துணைவியார் டத்தின் படுக்கா ஸ்ரீ அஃப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஜிஸ் ஆகியோரின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது.
சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் அவரின் துணைவியாருக்கு மீடியா சிலாங்கூரும் தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.