கோலாலம்பூர், அக் 2 - இந்த ஆண்டு அக்டோபரிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டாய EPF பங்களிப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படவுள்ளதாக ஊழியர் சேம நிதி வாரியம் (EPF) அறிவித்துள்ளது.
இதில் முதலாளி மற்றும் தொழிலாளர் என இரு தரப்பினரும் மாதச்சம்பளத்தின் 2 சதவீதத்தை ஊழியர் சேம நிதி வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் வேலை அனுமதி ஆவணங்களைக் கொண்ட அனைவருக்கும் இந்த அமலாக்கம் செயல்படுத்தப்படும்.
வெளிநாட்டு தொழிலாளர்களின் பதிவை குடிநுழைவுத்துறையினருடன் (Immigration Department) இணைந்து ஊழியர் சேம நிதி வாரியம் தானியங்கி முறையில் இதை மேற்கொள்ளும் என்றும் பிற வகை அனுமதி பாஸ் வைத்திருப்போர் EPF அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
2026 ஜனவரி முதல், வெளிநாட்டு ஊழியர்கள் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்றும் EPF தெரிவித்துள்ளது.