ஷா ஆலம், அக்டோபர் 2: இன்று காலை, சிலாங்கூர் ராஜா மூடாவின் அரச திருமண விழா அரண்மனை வாகன அணிவகுப்புடன் ஆரம்பமாகியது.
மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் அவரது வாழ்க்கைத்துணை டத்தின் படுக்கா ஸ்ரீ அஃப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஜிஸ் ஆகியோரின் திருமண நிகழ்ச்சி, சுல்தான் அப்துல் அஜீஸ் அரண்மனை காட்சியகத்தில் இருந்து இஸ்தானா ஆலாம் ஷா வரை சுமார் 650 மீட்டர் தொலைவில் நடைபெற்ற அணிவகுப்புடன் தொடங்கியது.
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் யாங் முலியா புவான் நூர் லிசா இட்ரீஸ் அப்துல்லா ஆகியோரின் ஒரே மகனாக தெங்கு அமீர் ஷா 12 டிசம்பர் 1990ஆம் ஆண்டு அமெரிக்காவின் பசிபிக் பிரெஸ்பிடேரியன் மருத்துவமனையில் பிறந்தார்.
அவர் 11 வயதில், 3 மே 2002 அன்று சிலாங்கூர் ராஜா மூடாவாக அறிவிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு, இஸ்தானா ஆலாம் ஷாவில் நடைபெற்ற நிகழ்வில், அவர் சிலாங்கூர் மாநிலத்தின் 9வது ராஜா மூடாவாக அரசமரபு முறையில் பதவியேற்றார்.
தெங்கு அமீர் ஷா மாலேசியாவில் உள்ள அலிஸ் ஸ்மிட் பள்ளியில் கல்வியை தொடங்கினார். பின்னர் இங்கிலாந்தில் உள்ள வெலிங்டன் கல்லூரியில் மேல்கல்வியை தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு A லெவல் படிப்பை முடித்தார்.
பின்னர் 2014ஆம் ஆண்டு லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பசுமை மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் உயிரியல் (Ecology and Environmental Biology) துறையில் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் போர்ட்டிக்சனில் உள்ள மலேசியா நிலைத் தள இராணுவ பயிற்சி அகாடமியில் பயிற்சியைத் தொடங்கினார்.
அதனை தொடர்ந்து, யுனைடெட் கிங்டமில் உள்ள பிரபல ராயல் மிலிட்டரி அகாடமி சாண்டர்ஸ்டில் (RMAS) பயிற்சியைத் தொடர்ந்தார். அவர், 2016ஆம் ஆண்டு மலேசிய இராணுவத்தின் 17வது ரெஜிமென்ட் ஆஸ்கார் மெலாயு டிராஜா (RAMD) இல் லெப்டினன்ட் மூடாவாக பதவியேற்றார். .
2017ஆம் ஆண்டு, அவர் மரூன் பேரட் மற்றும் கௌரவ சயாப் பெனெருஜூன் விருதுகளைப் பெற்றார். இது அவரை payung terjun elit படையின் உறுப்பினராக தகுதி பெற்றவராக்கியது. 2020ஆம் ஆண்டில், அவர் கேப்டன் என்ற உயர் இராணுவ பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
அவர் 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Selangor Youth Community (SAY) என்ற இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த இயக்கம், இளைஞர்களின் தனிநபர் வளர்ச்சி, குடிமக்கள் ஈடுபாடு மற்றும் சமூக உறுதியை ஊக்குவிக்கிறது.
சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் (FAS) தலைவராகவும், Selangor FC-யின் தலைவராகவும், Royal Selangor Yacht Club-இன் வாழ்நாள் கமோடோர் பதவியிலும், மற்றும் பின்வரும் அமைப்புகளில் அரச உத்தியோகத்தராகவும் (Royal Patron) சிலாங்கூர் ராஜா மூடா உள்ளார்: Cheshire Home Selangor, Yayasan Raja Muda Selangor, Invest Selangor, Children’s Protection Society (CPS), Water Air Food Awards (WAFA) மற்றும் World Corporate Golf Challenge (WCGC).
அவர், 2018ஆம் ஆண்டு, புத்ரா மலேசியா பல்கலைகழகத்தில் ப்ரோ-சென்சலராக (Pro-Chancellor) நியமிக்கப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு Putra Business Schoolஇன் சென்சலராக நியமிக்கப்பட்டார்.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் அவருக்கு “Transformational Leadership Fellow” என்ற பெருமை வழங்கப்பட்டது. இது அவரது கல்வி மற்றும் உலகளாவிய தலைமையகத் திறன் வளர்ச்சியின் உறுதியை பிரதிபலிக்கிறது.
அரசுப் பொறுப்புகளுக்கு வெளியே, தெங்கு அமீர் ஷா உடல் வலிமை மற்றும் சவால் நிறைந்த விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். அவர் கினாபாலு மற்றும் கிலிமஞ்சாரோ மலைகளை ஏறியுள்ளார். அவருக்கு பேடில் டென்னிஸ், டென்னிஸ், சைக்கிள் ஓட்டம் மற்றும் கடல் பயண விளையாட்டுகளில் ஆர்வம் உண்டு.
அவர் மக்களுடனான உறவை பெரிதும் மதிப்பவராகவும், சேவை உணர்வுடன் கூடிய இராஜநிலைத் தலைவராகவும் திகழ்கிறார்.