ad

இஸ்ரேலிய இராணுவத்தால் நான்கு மலேசியர்கள் தடுத்து வைப்பு

2 அக்டோபர் 2025, 2:32 AM
இஸ்ரேலிய இராணுவத்தால் நான்கு மலேசியர்கள் தடுத்து வைப்பு
இஸ்ரேலிய இராணுவத்தால் நான்கு மலேசியர்கள் தடுத்து வைப்பு

சிப்பாங், அக். 2 - குளோபல் சுமுட் ஃபுளோட்டிலா மனிதாபிமான பயணத்தில் இடம் பெற்றிருந்த மலேசியக் குழுவைச் சேர்ந்த நால்வர் ஸியோனிச இராணுவத்தால் காஸா கடல் பகுதியில் இன்று அதிகாலை தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஹியோ கப்பலில் பயணித்த பாடகர் ஹெலிசா ஹெல்மி, அவரின் சகோதரி நுர் ஹஸ்வானி அபிகா, கிராண்டி புளு கப்பலில் இருந்த நுர்பராஹின் ரோம்லி மற்றும் டேனிஸ் நஸ்ரான் முராட் ஆகியேரும் அடங்குவர்.

கிராண்டி புளு கப்பல் காஸா நேரப்படி நள்ளிரவு 12.58 மணிக்கும் ஹியோ கப்பலில் அதிகாலை 2.34 மணிக்கும் காஸாவிலிருந்து 60 கடல் மைல் தொலைவில் வழி மறிக்கப்பட்டதாக சுமுட் நுசாந்தாரா கட்டுப்பாட்டு மையத்தின் அடையாளம் முறை (எஸ்.என்.சி.சி.) தெரிவித்தது.

அவ்விரு கப்பல்களும் வழி மறிக்கபட்டப் பின்னர் மலேசிய நேரப்படி இன்று காலை 7.50 மணி வரை 17 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் பங்கு கெண்டவர்களில் பாடகர் ஜிஜி கிரானா, மூசா நுவாய்ரி, இலியா பால்கிஸ், சுல் அய்டி, ஹைக்கால் அப்துல்லா, முவாஸ் ஜைனால், ஜூல்ஃபாட்லி கினுடின், ருஸிடி ரம்லி, ஆகியோரும் அடங்குவர்.

இதுவரை பத்து கப்பல்கள் தாக்குதல் அபாயத்தில் உள்ள வேளையில் மேலும் 13 கப்பல்கள ‘அவசர‘ சமிக்கைஞையை அனுப்பியுள்ளன என்று எஸ்.என்.சி.சி. கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.