ஷா ஆலாம், அக் 1 : புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர் ஒருவர் பயன்படுத்திய, டொயோட்டா ஃபார்ச்சூனர் (SUV) வாகனத்தில் மற்றொருவரின் பதிவு எண்ணைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த சனிக்கிழமை பேராங் R&R அருகே சாலைப் போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு அதிகாரிகள் இரவு சுமார் 9.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
SUV வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் வெவ்வேறு பதிவு எண்கள் பொருத்தப்பட்டிருந்ததாக சாலைப் போக்குவரத்து துறையின் மூத்த இயக்குநர் டத்தோ முகமது கிஃப்லி மா ஹசன்.
“வாகனத்தின் முன்புறத்தில் PRF என்ற எண்ணும் , பின்புறத்தில் RF என்ற எண்ணும் காணப்பட்டது. விசாரணையில் RF எண் சட்டபூர்வமானது ஆனால் அது மற்றொரு நபருக்குச் சொந்தமானது என்பதை கண்டறிந்தோம். மேலும், JPJ தரவுத்தளத்தில் அந்த RF எண் பெயரில் 2023 முதல் மொத்தம் 42 சமன்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த மோசடி RF எண் உரிமையாளர் JPJ-க்கு புகார் அளித்த பின்பே வெளிப்பட்டது, ஏனெனில் அவருக்கு தவறான கருப்புப்பட்டியல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.