கோலாலம்பூர், அக் 1: காசா நோக்கி புறப்பட்டுள்ள குளோபல் சுமூத் ஃப்ளோட்டில்லா (GSF) மிஷன் கப்பல் தற்போது எச்சரிக்கையுடன் உள்ளது. இதற்குக் காரணம், மிஷன் நடைபெறும் கடல் பிரதேசத்தின் வான்வெளியில் ட்ரோன் இயக்கங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சுமூத் நுசந்தாரா தனது சமூக ஊடகப் பதிவில், “இந்த நிலைமைகள் பங்கேற்பாளர்களுக்கு மேலும் கடுமையான சவால்கள் வரப்போகின்றன என்பதைக் குறிக்கின்றதாக தெரிவித்துள்ளது. ஃப்ளோட்டில்லா கப்பல், ஆபத்தான பகுதியில் தற்போது நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் வேறுவிதமான நிகழ்வுகள் நடைபெறக்கூடும் என்ற ஆரம்ப தகவல்களும் எங்களுக்கு வந்துள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், GSF தனது இன்ஸ்டாகிராம் அறிவிப்பில், கப்பல் தற்போது காசாவிலிருந்து 145 கடல் மைல் தூரத்தில் மட்டுமே இருப்பதாகவும், ஆபத்தான மண்டலத்தில் நுழைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இப்பணியில் மலேசியாவிலிருந்து 34 பேர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 45 நாடுகளிலிருந்து வந்த மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் காசாவை நோக்கி ஒன்றிணைந்து கடல் மார்க்கத்தில் புறப்பட்டுள்ளனர்.