ad

வேப் தயாரிப்புகளைத் தடை செய்யும் முன்மொழிவை MRECA கேள்விக்குட்படுத்தியது

1 அக்டோபர் 2025, 7:29 AM
வேப் தயாரிப்புகளைத் தடை செய்யும் முன்மொழிவை MRECA கேள்விக்குட்படுத்தியது

ஷா அலம், அக் 1 : மலேசிய ரீட்டெயில் வேப் சங்கம் (MRECA) சுகாதார அமைச்சு எழுப்பிய வேப்பை முழுமையாகத் தடை செய்யும் முன்மொழிவை கேள்விக்குட்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை சட்டத்தைப் பின்பற்றும் தொழில்துறையையே தண்டிக்கும் முயற்சியாகும்.

வேப் தொழில் தற்போது சுகாதார அமைச்சு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றிவருகிறது. இதில் பாதுகாப்பு சோதனை, மூலப்பொருள் வெளிப்படுத்தல், தரக் கட்டுப்பாடு, சரியான லேபிள் போன்றவை அடங்கும். மேலும், ஒவ்வொரு தயாரிப்புக்கும் RM5,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அதன் தலைவர் டத்தோ அட்ஸ்வான் அபு மனாஸ் தெரிவித்தார் .

பல தயாரிப்பு வகைகளை கொண்ட நிறுவனங்கள், அரசு நிர்ணயித்துள்ள இந்த அடிப்படை நிபந்தனைகளுக்காக மட்டும் நூற்றுக்கணக்கான ரிங்கிட்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், முழுமையான தடை விதிக்கப்படும் பட்சத்தில், தொழில்துறை செய்திருக்கும் நூறு கோடி ரிங்கிட் அளவிலான முதலீடுகள் உற்பத்தி வசதிகள் மேம்படுத்தல், ஆய்வகச் சோதனைகள், கண்காணிப்பு முறைமை பயன்பாடு போன்றவை அனைத்தும் பாதிக்கப்படும். இதன் விளைவாக, பெரும் நிதி இழப்புகள், வேலை வாய்ப்பு குறைவு மற்றும் கட்டுப்பாட்டுக்குட்பட்ட துறை சிதைவடையும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்தார்.

மேலும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போலீஸ் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிகமான சோதனைத் தாக்குதல்கள் மற்றும் சட்டவிரோத விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளைத் தடைசெய்வது, கருப்பு சந்தையும் கடத்தலையும் அதிகரிக்கும். உண்மையான தீர்வு கூட்டணி, கட்டுப்பாட்டு நடவடிக்கை மற்றும் நியாயமான நடைமுறை மூலம் மட்டுமே கிடைக்கும், தடைசெய்தல் மூலம் அல்ல என அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.