கோலாலம்பூர், அக் 1 - BUDI95 திட்டம் செயல்படத்தப்பட்ட நான்கே நாட்களில், கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பயனர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் விற்பனை RM91 மில்லியனைத் தாண்டியுள்ளது என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
நேற்று மாலை 6 மணி வரையில், சுமார் 2 மில்லியன் மக்கள் RON95 பெட்ரோலை RM1.99 மானிய விலையில் வாங்கியுள்ளனர்.
எந்த தங்கும் தடையும் இன்றி திட்டம் சிறப்பாக நடைபெறுவதாகவும், குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாகனங்களை இயக்கி, போக்குவரத்தும் அதிகரித்ததாக அவர் கூறினார்.
சபா மற்றும் சரவாக் பகுதிகளில் படகு உரிமையாளர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும், ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கும் மேற்போகாதவர்களுக்கு தளர்வு வழங்குவது குறித்தும் ஆராயப்படுகிறது.