கோலாலம்பூர், அக். 1 - அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் "பெரிய சுறாக்கள்" அல்லது உயர் பதவியில் உள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட, அனைத்து வகையான அதிகார துஷ்பிரயோகங்களையும் ஊழலால் ஏற்படும் "குழப்பங்களையும்" சுத்தம் செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரிடமும் அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும் சமரசமற்ற கண்டிப்பு போக்கை இந்த கடப்பாடு கோருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
முடிந்தால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நாங்கள் குழப்பங்களை துப்புரவு செய்வோம் என்று நினைக்கிறேன். செய்தி தெளிவாக உள்ளது: நீங்கள் அமைச்சராக இருந்தாலும் தலைமைச் செயலாளராக இருந்தாலும் அல்லது தலைமை இயக்குநராக இருந்தாலும் தவறான நடத்தை இருந்தால் நாங்கள் உங்களைத் தேடி வருவோம்.
இன்று இல்லையென்றால் நாளை. நாளை இல்லையென்றால் அடுத்த வருடம். நீங்கள் ஓய்வு பெற்றாலும் நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்திலிருந்து எங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்தால் நாங்கள் உங்களைத் தேடி வருவோம் என அவர் சொன்னார்.
முன்னர் பரிந்துரைக்கப்பட்டது போல அரச மலேசியா காவல்துறை அல்லது பிற அமலாக்க அமைப்புகளை மேலும் வலுப்படுத்த விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவர் மடாணி மலேசிய அறிவுசார் மன்றத்தின் 8வது தொடரில் உரையாற்றிய போது போது கூறினார்.
உயர்மட்ட ஊழலைக் கையாள்வதில் உள்ள சிரமத்தையும் எடுத்துரைத்த அன்வார், "பெரிய சுறாக்கள்" பெரும்பாலும் ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைமை உட்பட பரந்த வளங்களையும் செல்வாக்கையும் கொண்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
குற்றவாளிகள் அல்லது "நெத்திலி மீன்கள்" மீதான நடவடிக்கை புறக்கணிக்கப்படாது என்று பிரதமர் கூறினார். எத்தனை எதிர்ப்பை எதிர்கொண்டாலும் தூய்மைப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை அரசு மூன்றாண்டுகளில் துடைத்தொழிக்கும்
1 அக்டோபர் 2025, 4:35 AM