கோலாலம்பூர், அக் 1 - பிலிப்பைன்ஸ் நாட்டின் லெய்டேயில் நேற்றிரவு 9.59 மணிக்கு ரிக்டர் அளவில் 6.9 எனப் பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியது. சபாவின் சண்டகானைச் சுற்றியிலுள்ள பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் ஓர்மோக்கிலிருந்து வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்ததாக
மலேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
எனினும், இந்த பூகம்பத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. நில அதிர்வை உணரும் மக்கள் https://forms.gle/NWR9oUvQoK3FsQ5j8 என்ற இணைப்பின் மூலம் தரவு ஆய்வு படிவத்தை நிரப்புமாறு வானிலை ஆய்வுத் துறை கேட்டுக்கொள்கிறது.
பிலிப்பைன்ஸின் லெய்டேயில் வலுவான நிலநடுக்கம் - சண்டகானிலும் நில அதிர்வு உணரப்பட்டது
1 அக்டோபர் 2025, 2:15 AM