வாஷிங்டன், செப் 30 - அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த வரியை சட்டரீதியாக எவ்வாறு அமல்படுத்தப் போகிறார் என்பதை தெளிவாக அறிவிக்கவில்லை. ட்ரம்பின் அறிவிப்புக்கு Warner Bros, Comcast, Paramount, Netflix உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் Netflix பங்குகள் 1.5% வீழ்ச்சி கண்டன. அதுமட்டுமில்லாமல், சட்ட நிபுணர்கள் ட்ரம்பின் அறிவிப்பை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.
திரைப்படங்கள் அறிவுசார் சொத்து என கருதப்படுவதால், இதற்கு வரி விதிப்பது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்தும் என்றனர்.
மேலும், இன்றைய படங்கள் பல நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பு மற்றும் visual effectsz குழுக்களால் உருவாக்கப்படுகின்றன.
எனவே, இது யாருடைய படம்? எந்த நாட்டின் படம்? என பிரித்து பார்ப்பது கடினம் என்ற முக்கிய அம்சத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.
தற்போதைக்கு ட்ரம்பின் அறிவிப்பு ஹோலிவூட்டில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி நடைமுறைக்கு வருமா? வந்தால் எப்படி அமுலாகும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.