ad

உதவித்தொகை இல்லாத RON95 லிட்டருக்கு RM2.60

30 செப்டெம்பர் 2025, 4:10 AM
உதவித்தொகை இல்லாத RON95 லிட்டருக்கு RM2.60

கோலாலம்பூர், செப் 30 - இன்று முதல் அக்டோபர் 8 வரை உதவித்தொகை இல்லாத RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM2.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், RON97 பெட்ரோலின் விலை RM3.21ஆகவும், டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் RM2.93 மற்றும் கிழக்கு மலேசியாவில் RM2.15ஆகவும் தொடருகிறது.

இந்த விலை அக்டோபர் மாதம் முழுவதும் நிலைத்திருக்கும்; பின்னர் உலகச் எண்ணெய் சந்தை விலைகளின் அடிப்படையில் மாற்றப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

BUDI95-க்கு தகுதிப் பெற்ற மலேசியர்கள் RON95 ஒரு லிட்டருக்கு RM1.99 மட்டுமே செலுத்துவார்கள் என குறிப்பிடத்தக்கது.

இதனிடையே e-hailing ஓட்டுநர்களுக்கு, கூடுதல் எரிபொருள் உதவித்தொகை வழங்க அரசாங்கம் சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

அதற்கான விண்ணப்ப முறை இந்த வாரத்திற்குள் முடிவுச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

மக்களின் நலனை பாதுகாக்கவும் விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.