கோலா திரங்கானு, செப்டம்பர் 30: போலி கிரிப்டோகரன்சி முதலீட்டு திட்டத்தால் ஏமாற்றப்பட்ட ஓய்வூதியதாரர் ஒருவர் RM525,000 இழந்தார்.
மே 23 அன்று, 71 வயதான நபர் சமூக ஊடக தளமான முகநூலில் கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கான விளம்பரத்தைக் கண்டதாகக் கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நோர் கூறினார்.
சந்தேக நபரை இணையத்தில் தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்டவர், 500,000 அமெரிக்க டாலர்களை திருப்பித் தருவதாக உறுதியளிக்கப்பட்ட பின்னர் RM525,000 முதலீடு செய்ததாக அவர் கூறினார்.
"PTD முன்னாள் இயக்குநரான பாதிக்கப்பட்டவர், ஆகஸ்ட் 20 முதல் 27 வரை தனது சொந்த ஓய்வூதிய சேமிப்பைப் பயன்படுத்தி சந்தேக நபரின் கணக்கில் ஏழு பரிவர்த்தனைகளைச் செய்தார்.
"இந்த வழக்கு, தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. பல்வேறு இணைய மற்றும் சமூக ஊடக மோசடி தந்திரங்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்துகிறது," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா