குவாங்ஸோ, செப். 30 - தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் கல்வியில் (திவேட்) மகளிரின் பங்கேற்பை அதிகரிக்கும் சிலாங்கூர் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவுடன் விவேகப் பங்காளித்துவம் தொடர்பில் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டுக் கழகம் (எஸ்.டி.டி.சி.) ஏபிஆர் எலக்டானிக் செர்விசஸ் சென். பெர்ஹாட் மற்றும் குவாங்டோங் எல்லை கடந்த உற்பத்தி பொருள் வர்த்தக சங்கம் ஆகிய தரப்பினருக்கு இடையே குவாங்டோவில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் மின் வணிகம் துறைகளில் போட்டி ஆற்றல் மிக்க வட்டார கற்றல் மையமாக சிலாங்கூரை உருவாக்கும் முயற்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக
விளங்குகிறது என்று மந்திரி புசார் கூறினார். உயர் மனித வளத் துறையில் குறிப்பாக, திவேட் திட்ட அமலாக்கம் வாயிலான வியூகத் திட்ட மேம்பாட்டில் எஸ்.டி.டி.சி முக்கிய உந்து சக்தியாக விளங்கும் என அவர் குறிப்பிட்டார்.
குவாங்டோங் உமன் போலிடெக்னிக் காலேஜ் உடன் இணைந்து உமன் இன் திவேட் முன்னெடுப்பை அமல்படுத்துவதன் வாயிலாக திவேட் திட்டத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார் அவர்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மின் வர்த்தகத்தில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் ஏற்ற தளமாக உமன் இன் திவேட் திட்டம் விளங்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
குவாங்டோங் பயணம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிய நிகழ்வுகளுடன் மந்திரி புசாரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வப் பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.