ஷா ஆலம், செப். 29 - நேற்றிரவு பத்து 13 டோல் சாவடி அருகே சுமார் 20 மோட்டார் சைக்கிளோட்டிகள் 52 வயதுடைய பாதுகாப்புக் காவலரின் காரைச் சூழ்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் நிகழந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்ததாக செர்டாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது ஃபாரிட் அகமது தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் சுமார் 20 மோட்டார் சைக்கிளோட்டிகள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. சம்பவத்திற்கான காரணத்தை போலீசார் தற்போது தீவிரமாகக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் தேடி வருகின்றனர் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவ சாட்சிகளை முன்வருமாறு கேட்டுக்கொண்ட அவர், தண்டனைச் சட்டப் பிரிவு 427 மற்றும் பிரிவு 279 இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு ஊகத்தையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பெரோடுவா மைவி கார் ஒன்று மோட்டார் சைக்கிள் கும்பலால் சூழப்பட்டிருப்பதைச் சித்தரிக்கும்
காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
பாதுகாவலரின் காரை சூழந்த 20 மோட்டார் சைக்கிளோட்டிகள் - கதவை உதைத்து அராஜகம்
29 செப்டெம்பர் 2025, 9:03 AM