ரவாங், செப். 29 - ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ஆலிஸ் மற்றும் டபள்யு.டபள்யு.ஆர்.சி. பிரதிநிதி ஓய் ஆகியோருடன் இணைந்து தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய சமூகத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக சுவா கூறினார்.
மொத்தம் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று மைடின் ரவாங்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தலா 100 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி பெருநாளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்
தீபாவளியைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய சுமையைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
மேலும் அதிகமான மக்களுக்கு உதவக்கூடிய வகையில் அதிக நன்கொடைகளைப் பெற நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம் என அவர் சொன்னார்.