ஷா ஆலம், செப். 29- சிலாங்கூர் இளைஞர் மாநாடு 2025 எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஷா ஆலம், ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெறும். இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பார்கள்.
"தலைமுறையைத் திட்டமிடுதல், நாகரிகத்தை வடிவமைத்தல்" என்ற கருப்பொருளில் மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, சிலாங்கூரின் வளர்ச்சியில் இளைஞர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் தங்கள் ஒருங்கமைப்புகளை விரிவுபடுத்தி பங்களிப்பை வலுப்படுத்தவும் ஒரு தளமாக அமையும்.
இளம் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தலைமைத்துவ மன்றம், வணிக சின்னங்களைக் கொண்ட தொழில்முனைவோர் மன்றம், அத்துடன் பிரபல விளையாட்டு வீரர்கள், சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து வீரர்கள் மற்றும் இ ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் இடம்பெறும் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆய்வரங்கம் ஆகியவை இந்நிகழ்வின் சுவாரஸ்யமான உள்ளடக்கங்களில் அடங்கும்.
மேலும், இம்மாநாட்டின் பங்கேற்பாளர்கள் 2025 மலேசியா விளையாட்டுப் போட்டிகளுக்கு (சுக்மா) தன்னார்வலர்களாக முன்கூட்டியே பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதன்வழி நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வின் ஏற்பாட்டின் ஒரு அங்கமாக அவர்கள் மாறுகிறார்கள்.
இந்த மாநாடு வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறுகிறது. ஏற்பாட்டாளர்கள் வழங்கிய கியுஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இதில் பதிவு செய்யலாம்.
2025 சிலாங்கூர் இளைஞர் மாநாடு- செப்டம்பர் 30இல் நடைபெறும்
29 செப்டெம்பர் 2025, 2:00 AM