பெத்தோங், செப். 28- கடந்த வெள்ளிக்கிழமை சரடோக்கின் காபா பெர்ரி அருகே கிரியான் ஆற்றில் படகு மூழ்கிய சம்பவத்தில் காணாமல் போன எஞ்சிய மூவரும் இன்று நீரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்களை தேடி மீட்கும் நடவடிக்கை இன்று காலை
8.00 மணிக்கு சரடோக் தீயணைப்பு நிலையம், மாநில தீயணைப்புத் துறையின் கே9 மோப்ப நாய் பிரிவு மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் பங்கேற்புடன் தொடங்கியதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மைய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இரண்டாவது நபரை காலை 10.10 மணியளவில் கிராமவாசிகள் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் காலை 10.15 மற்றும் 10.45 மணி மேலும் இரண்டு பாதிக்கப்பட்டவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டு ள்ளனர். மூவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை காலை 11.10 மணிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 10 கட்டுமானத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற படகு செசாங் படகுத் துறையிலிருந்து பூசா படகுத் துறைக்கு ஆற்றைக் கடக்கும் போது மூழ்கியது.
இச்சம்பவத்தில் ஆறு இந்தோனேசியர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். மேலும் நான்கு பேர் காணாமல் போயினர். காணாமல் போன நபரின் நான்கு பேரில் ஒருவர் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டார்.