நியூயார்க், செப். 28- பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக சான் மரினோ நேற்று அறிவித்தது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80வது
பொதுப் பேரவையில் உரையாற்றும் போது சான் மரினோ வெளியுறவு அமைச்சர் லூகா பெக்காரி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) கூறியது.
ஐ.நா. தீர்மானத்தின்படி பாதுகாப்பான மற்றும் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இறையாண்மை மற்றும் சுதந்திரமான நாடாக பாலஸ்தீன அரசை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறோம்.
ஒரு சுதந்திர அரசை நிறுவுவது பாலஸ்தீன மக்களுக்கு ஒரு பிரிக்க முடியாத உரிமை என்று பெக்காரி கூறினார்.
இறையாண்மை கொண்ட நாடாக பாலஸ்தீனத்தை சான் மரினோ அங்கீகரித்தது
28 செப்டெம்பர் 2025, 6:31 AM