புத்ராஜெயா, 27 செப்: புத்ராஜெயாவில் 20 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டிருந்த மோனோரெயில் பாலத்திற்கு புதிய பயன்பாடு வழங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அது நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதையாக பயன்படும் என்று பிரதமர் துறை (கூட்டாட்சி பிரதேசங்கள்) அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இனி இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கான கவன ஈர்ப்பாக மாறி, புட்ராஜெயா ஏரியின் அழகிய காட்சியை ரசிக்க வழிவகுக்கும்,” என்று அவர் புட்ராஜெயா கார்னிவல் 2025-இல் வழங்கிய உரையில் தெரிவித்தார். இதேவேளை, பாலத்தை நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதையாக மேம்படுத்துவதற்காக RM15 juta ஒதுக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் மேம்படுத்தும் பணிகள் தற்போது 50 விழுக்காடு முடிவடைந்துள்ளன. இப்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன, டிசம்பர் மாதத்திற்குள் முழுமையடையும். 200 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், முதலில் மோனோரெயிலுக்காக வடிவமைக்கப்பட்டதால், நடைபாதை மற்றும் மிதிவண்டிகள் தவிர பிற வாகனங்களுக்கு திறக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.